Page Under Maintenance ---- Data will be Updated Next Month






MARCH APRIL SSLC SUPPLEMENTARY EXAM - PRIVATE & TATKAL PRIVATE CANDIDATE Procedure

மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள், வருகிற 29-ம் தேதி முதல் நவம்பர் 7-ம் தேதி வரை கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசுத் தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறும் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள், வருகிற 29-ம் தேதி முதல் நவம்பர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கும், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், அக்டோபர் 29-ம் தேதி முதல் நவம்பர் 7-ம் தேதி வரை, கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசுத் தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு மற்றும் சேவை மையங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.tndge.in) தெரிந்துகொள்ளலாம். கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடந்த, 10-ம் வகுப்பு துணைத் தேர்வை எழுதிய தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்களில் மதிப்பெண் சான்றிதழ்களை இன்று (சனிக்கிழமை) நேரில் பெற்றுக்கொள்ளலாம்; தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட மாட்டாது. மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், அரசு தேர்வுத்துறை சேவை மையங்களில், வருகிற 27 முதல் 29-ம் தேதி வரை நேரில் சென்று, ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும். மறுகூட்டலுக்கு, இரு தாள்கள் கொண்ட பாடத்துக்கு ரூ.305-ம், ஒரு தாள் பாடத்துக்கு ரூ.205-ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Post by Students

Recent News



1.Easy 10th,+12 & other Exams 2014-15 அட்மிஷன் நடைபெறுகிறது.